தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை போடி கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
நேர்மைக்கு கிடைத்த பாராட்டு! - rupees
தேனி: பெரியகுளம் அருகே ஏடிஎம்-ல் விட்டுச் சென்ற பணத்தை நேர்மையுடன் காவல்துறையினரிடம் ஒப்படைத்த மெக்கானிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இவர், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றபோது, அறையினுள் கேட்பாறற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்த பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் அந்த பணப்பையை ஒப்டைத்து உரியவர்களிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார். அதில் 500 ரூபாய் தாள்கள் அடங்கிய ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
பணத்தை நேர்மையுடன் காவல்துறையினரிடம் ஓப்படைத்த மணிகண்டனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.