தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்மழை: மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்வு - மஞ்சளாறு அணை நீர்மட்டம்

தேனி: தேவதானப்பட்டி அருகே தொடர்மழை காரணமாக, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது.

மஞ்சளாறு அணை
மஞ்சளாறு அணை

By

Published : Nov 6, 2020, 4:05 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் சற்று உயரத் தொடங்கியது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு நீர் மட்டம் 57அடி உயரம் ஆகும்.

இதற்கிடையில் இன்று (நவ. 06) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.80 அடியாகவும், நீர்இருப்பு 353.41 மி.கன அடியாகவும் இருந்தது. மற்றொரு பக்கம் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் தலையாறு உள்ளிட்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்வரத்து 158 கன அடியில் இருந்து தற்போது, 205 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பிற்பகலில் அணையின் நீர் மட்டம் 51அடியை எட்டியது.

இதையடுத்து தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் ஆகிய இருமாவட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதும், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், அதனைத் தொடர்ந்து 55அடியாக உயர்ந்ததும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவு 57 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வராக நதி ஆறு தூர்வாரப்பட்டதால் தங்கு தடையின்றி செல்லும் மழைநீர்

ABOUT THE AUTHOR

...view details