தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி, மாமியார் என இருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை! - mother in law

தேனி: போடி அருகே குடும்ப தகராறில் மனைவி, மாமியார் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மற்றும் மாமியார் அரிவாளால் வெட்டிக் கொலை

By

Published : Apr 21, 2019, 8:11 PM IST

போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகன்டன்(44). கூலித்தொழிலாளியான இவர், மனைவி பழனியம்மாள்(40) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உத்தமபாளையம் அருகே கோம்பை அமுல் நகரில் உள்ள தனது மாமியார் முத்தம்மாள்(70) வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார். மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு வந்துவிடுமாறு மனைவி பழனியம்மாளுடன் அடிக்கடி தகராறு செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தனது மனைவி பழனியம்மாளையும், மாமியார் முத்தம்மாளயும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேரையும் கொலை செய்து விட்டு மணிகண்டன் அங்கேயே இருந்தபோது, வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்துவை, மணிகண்டன் அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, பண்ணைப்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை ரோந்து பணியிலிருந்த காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மணிகண்டனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், தன் மனைவியயும், மாமியாரையும் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, இறந்த பழனியம்மாளின் சகோதரர் பழனிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில், கோம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் இரட்டைக்கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details