தமிழ் சினிமா துறையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கி சேரன் நடிப்பில் வெளிவந்த "யுத்தம் செய்" என்ற திரைப்படத்தில் கை, கால்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறும். இதேபோல தேனியில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் சுருளிப்பட்டி சாலை வழியாக முல்லைப் பெரியாறு செல்கிறது. தற்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. எனவே அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் வாகனத்தில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் கையில் சாக்குப் பையுடன் தொட்டமாந்துறை பகுதிக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.