தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2020, 10:01 PM IST

ETV Bharat / state

லண்டனில் இருந்து தேனி திரும்பியவரின் குடும்பத்தினருக்கு கரோனா உறுதி!

லண்டனில் இருந்து தேனி திரும்பிய மென்பொருள் பொறியாளரின் தந்தை, அத்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

London returned persons relatives tested positive
லண்டனில் இருந்து தேனி திரும்பியவரின் குடும்பத்தினருக்கு கரோனா உறுதி

தேனி:இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழ்நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கணக்கில்எடுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி, தேனி மாவட்டத்தில் 22 பேர் கண்டறியப்பட்டு கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில், லண்டனில் இருந்து திரும்பிய மென்பொருள் பொறியாளருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்து உறவினர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருடைய தந்தை, அத்தை ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கரோனா தொற்று உறுதியான மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, காவல், மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அவர்களின் தொடர்புகள் குறித்து கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு சென்று திரும்பியவர்கள் குறித்து தினசரி அரசு தரும் பட்டியல் கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஏதேனும் தொற்று அறிகுறி தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்களும் அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:உருமாறிய கரோனா வைரஸ் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details