தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி: பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் வெட்டி படுகொலை - உரிமையாளர் கொலை

தேனி மாவட்டம் போடியில் பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனியில் பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் வெட்டி படுகொலை
தேனியில் பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் வெட்டி படுகொலை

By

Published : Jul 30, 2022, 4:32 PM IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவர் இன்று (ஜூலை 30) காலை தனது இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த கும்பல் அவரை வழி மறித்தனர்.

இதையடுத்து ராதாகிருஷ்ணனை பலத்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கழுத்து, தலை பகுதியில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில், கொலை செய்த கும்பல் போடியிலிருந்து கேரள மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கேரளா மாநிலம் செல்லும் வழியில் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புற்று நோயால் உயிரிழந்த காதலி - துக்கம் தாங்காமல் காதலர் ரயிலில் விழுந்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details