தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திறக்கப்படும் கடை...' - மதுபானம் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்! - tamil news

தேனி: நாளை திறக்கப்படவுள்ள அரசு மதுபானக்கடைகளுக்கு சேமிப்பு கிடங்கிலிருந்து மதுபானங்களை லாரியில் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

sds
dsd

By

Published : May 6, 2020, 8:12 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மதுபானம் கடத்துவது போன்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் அரசு மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் வரும் மக்களின் வயதிற்கு ஏற்ப நேரங்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் அரசு அறிவித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மற்ற 38 இடங்களில் உள்ள கடைகளுக்குத் தேவையான சரக்குகள் ரத்தினம் நகரில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து லாரிகளில் அனுப்பும் பணி நடைபெறுகிறது.

சமூக இடைவெளியுடன் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க:மதுக்கடைத் திறப்பு பாதுகாப்பு விவரங்கள்

ABOUT THE AUTHOR

...view details