தேனி:கடந்த டிசம்பர் மாதம்பெரியகுளம் பகுதியில் உள்ள மஞ்சளாறு கிராமத்தில் மகனே தாயை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன்- ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகன் மருதுபாண்டி (வயது 23). கஞ்சா மற்றும் குடி போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் மருதுபாண்டி வீட்டில் இருந்த தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதையே வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று தாய் ஜோதிலட்சுமியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் மருதுபாண்டி. அப்பொழுது தாய் ஜோதிலட்சுமி எந்த வேலைக்கும் செல்லாமல் இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுத்துப் பிழை என சொல்லி மருதுபாண்டியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு ஜோதிலட்சுமியின் தலையின் பின் பக்கத்தில் பலமாக தாக்கி உள்ளார். இதனால் காயமடைந்த தாய் ஜோதிலட்சுமி கீழே விழுந்துள்ளார். அப்போது மீண்டும் அவர் முகத்தில் கோடாரியை கொண்டு தாக்கியதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.