தமிழ்நாடு

tamil nadu

தேனியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!

By

Published : Jan 3, 2020, 6:02 PM IST

தேனி: நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலில் அகில இந்திய பார் கவுன்சில் தலையிடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Theni lawyers protest
Theni lawyers protest

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றவருகிறது. அந்தவகையில், தேனி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் லெட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் அகில இந்திய பார் கவுன்சில் தலையிக்கூடாது, உயர் நீதிமன்ற நீதிபதியின் வயது வரம்பினை உயர்த்தக்கூடாது, நீதிமன்ற கட்டணத்தைக் குறைக்க வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும், சேமநல நிதியினை 15 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில் நீதிமன்ற வளகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஏராளமான நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையரிடம் மீண்டும் மீண்டும் முறையிடும் திமுக

ABOUT THE AUTHOR

...view details