போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கனி (38). தேவாரம் சாலையில் சட்ட ஆலோசனை மையம் நடத்திவரும் இவரிடம், ரமாதேவி (23) என்ற பெண் வழக்கறிஞர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வழக்கறிஞர் கனி, போடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, குற்றவாளிகளை பிணையில் எடுத்ததாக, வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவர், தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில், போடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் ஜமீன்தார் மேற்கொண்ட ஆய்வில், கிராம நிர்வாக அலுவலர்களால் அளிக்கப்படும் சான்றிதழ்களை, வழக்கறிஞர் கனி போலியாக தயாரித்து, அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு பிணை வாங்கித் தந்தது கண்டறியப்பட்டது. இதற்கு உடந்தையாக அவரது உதவியாளர் ரமாதேவி செயல்பட்டதும் தெரிய வந்தது.