தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிப்பதோடு, கும்பக்கரை அருவியில் விழும் நீரானது மூலிகைத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - tourist people
தேனி: போதிய அளவு நீர் வரத்து இருந்தும் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால் சுற்றுலா பயணிகளும் சபரிமலை பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. எனவே வனத்துறையினர் ஜனவரி 28ம் தேதி அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பரவலாக மழை பெய்த காரணத்தினால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வனத்துறையினர் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கான தடையை நீக்காமல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மேலும் சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்லும் பக்தர்களும், அருவியில் புனித நீராடுவதற்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் வனத்துறையிடம் சுற்றுலா பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.