தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபரிமலை சீசன் வரை கடை நடத்த அனுமதிகோரி சாலையோர வியாபாரிகள் மனு! - சபரிமலை சீசன்

தேனி: கம்பம் அருகே கேரள சாலையில் உள்ள சாலையோர கடைகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சபரிமலை சீசன் வரையில் கால அவகாசம் அளிக்கக் கோரி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

petition
petition

By

Published : Nov 23, 2020, 1:02 PM IST

தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். இங்கிருந்து குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய 3 மலைச்சாலைகள் வழியாக கேரளாவின் இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சுலபமாக சென்று வரலாம்.

இவற்றில் நெடுஞ்சாலை ஓரத்தில் சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கடைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் சாலையோர வியாபாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதனிடையே கம்பம் டூ குமுளி வரையில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், “கம்பம் ஆங்கூர்பாளையம் தொடங்கி அப்பாச்சி பண்ணை, எல்.எப்.ரோடு என குமுளி வரையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் டீக்கடைகள், உணவகங்கள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றோம்.

தற்போது நெடுஞ்சாலைத் துறையினரின் உத்தரவை ஏற்று கடைகளை காலி செய்கிறோம். எனினும், தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் இந்த 3 மாதத்திற்கு எங்களுக்கு கால அவகாசம் வழங்கினால் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் இந்தக் கால அவகாசத்திற்குள் நாங்கள் மாற்று இடங்களை தேர்வு செய்து கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details