தேனி: ஜப்பானிய 5S வழிமுறைகள் என்பது தேவையற்றவைகளை அகற்றுதல், ஒழுங்குபடுத்துதல், ஆய்வு செய்து சுத்தம் செய்தல், நிலைப்படுத்துதல், ஒழுக்கத்துடன் கடைபிடித்து தக்க வைத்தல் ஆகியவையாகும்.
இந்த அடிப்படையான வழிமுறைகளை கடைபிடித்து ஜப்பான் நாடு இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இன்று உலக அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணமாக உள்ளது. இந்த வழிமுறைகளை ஜப்பானில் வேலை பார்த்து கற்றுக் கொண்ட ராஜ்குமார் என்ற பொறியாளர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இந்த முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் மில்லில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தியதில் சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவற்றை ஊழியர்கள் கடைபிடித்ததால் தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரித்தது. இதனால் அந்த தொழிற்சாலை நிர்வாகம் 4 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அவர்கள் கற்றதை அந்த பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியது.