தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kallalagar: தேனியில் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கிய இரண்டு கள்ளழகர்கள்! - உப்பார்பட்டி

தேனி உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமங்களில் இருந்து கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபவம் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் நடைபெற்றது.

In Theni two Kallazhagar descended ceremony in the Mullaperiyar held at same time
தேனியில் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கிய இரண்டு கள்ளழகர்கள்

By

Published : May 5, 2023, 11:35 AM IST

தேனியில் இரண்டு கள்ளழகர்கள் ஒரே நேரத்தில் முல்லை பெரியாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது

தேனி:உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது . அதேபோல் உப்பார்பட்டி கிராமத்தை சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றின் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 'கோவிந்தா' கோஷமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதன் பின்பு ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: kallalagar: பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்.. மதுரையை அதிர வைத்த 'கோவிந்தா' முழக்கம்!

ABOUT THE AUTHOR

...view details