தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் ஹைவேவிஸில் கடும் மண் சரிவு; தொடர்பில்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்! - Tribal Peoples

தேனி: மேகமலை மலையடிவாரப் பகுதிகளில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லக்கூடிய வாகங்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு, மேகமலை ஹெவேவிஸ் பகுதியில் வசிக்கு மலைவாழ் மக்கள் வெளியுலக தொடர்பின்றி உள்ளனர்.

highwavys-hills-road-damaged
highwavys-hills-road-damaged

By

Published : Dec 4, 2019, 1:33 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. மேகமலை, வைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, மகராஜாமெட்டு, மகாராணிமெட்டு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களைக் கொண்ட இப்பபகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு நிலவுகின்ற ரம்மியமான சூழலில், மழைச் சாரலில் நனைந்தபடி விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து ரசிக்கவும், அதன் ஊடாக சுற்றித்திரியும் வன விலங்குகளைப் காண்பதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, மேகமலையின் மலையடிவார பகுதியான தென்பழனி முதல் மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 35 கிலோமீட்டர் சாலையை அரசு சீரமைத்தது. இதன் பலனாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

தொடர் மழையால் ஹைவேவிஸில் கடும் மண் சரிவு

இந்நிலையில், கடந்த இருதினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மேகமலை மலைச் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்து, பாறைகள் சாலைகளில் விழுந்து காணப்படுகிறது. சில இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்காக கிடக்கின்றன. குறிப்பாக, தமிழன் காடு பகுதியில் இருந்து கடனா எஸ்டேட் வரையில் பெரிய அளவில் மண் சரிந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், மேகமலைக்குச் செல்லக்கூடிய வாகனங்களை மலை அடிவாரமான தென்பழனியில் காவல்துறையினரும், வனத்துறையினரும் தடுத்து நிறுத்துகின்றனர். அதே போல, மலை மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்களை ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும் மேகமலைக்கு செல்கின்ற சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வசிகின்ற மலைவாழ்மக்கள் வெளிஉலக தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மழை வேண்டி மரத்திற்கு திருமணம் செய்த கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details