தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவல் துறையினர் !

தேனி : கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் ஊதிய உயர்வு கேட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பேருந்துக்குள் போராட்டம் நடத்திய அவரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறையினர் !

By

Published : Jul 29, 2019, 11:03 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(45) கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை(2ல்) ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். தொழிலாளர் சட்டப்படி உள்ள 8 மணி நேரம் மட்டும் பணிபுரியும் கொள்கை உடைய இவர் கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி வந்தவர்.

இந்நிலையில், தற்போது கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் வேகத்தடைகள் அதிகமானதால், பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் அதிகம் ஆகிறது. எனவே கூடுதல் நேரத்திற்கு ஊதியம் வேண்டும் என திண்டுக்கல் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் 8 மணி நேரத்திற்கு உண்டான கம்பம் - செம்பட்டி வரை மட்டும் பேருந்தை இயக்கியதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பணி நீக்க உத்தரவினை கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் பாண்டியராஜன் பாலகிருஷ்ணனிடம் கொடுக்கவில்லை.

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறையினர் !

இதனையடுத்து அவரது பணி நீக்க காலம் முடிவடைந்ததால் பாலகிருஷ்ணன் இன்று பணிக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவருடன் பாண்டியராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பேருந்துக்குள் இருந்தபடியே போராட்டம் நடத்தினார். தகவலறிந்த கம்பம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துக்குள் போராட்டம் நடத்திய பாலகிருஷ்ணனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details