தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் தடுப்பு... - குண்டர் தடுப்பு சட்டம்

தேனி: உழவர் சந்தை பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கொலை வழக்குடன்-குண்டர் தடுப்பு சட்டம்!

By

Published : Aug 1, 2019, 3:38 AM IST

தேனி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள உழவர் சந்தை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி சாந்தியம்மாள்(58) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணையை தொடக்கிய தேனி நகர் காவல்துறையினர், அல்லிநகரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(21) மற்றும் மணிகண்டன்(28) ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரும் கடந்த ஜூன் 25ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மோகன்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பளர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.

இதை கருத்தில் கொண்டு நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details