தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் செயல்பட்ட பூண்டு மண்டிக்கு சீல் - ஊரடங்கில் செயல்பட்ட பூண்டு மண்டிக்கு சீல்

தேனி: ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட வெள்ளைப் பூண்டு கமிஷன் மண்டிக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

garlic godown sealed for violating curfew in theni
garlic godown sealed for violating curfew in theni

By

Published : May 2, 2020, 10:15 AM IST

Updated : May 2, 2020, 11:32 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி வெள்ளைப் பூண்டு சந்தைக்கு ஈரோட்டிலிருந்து லோடு ஏற்றி வந்த நாமக்கல் மாவட்ட லாரி ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடுகபட்டி வெள்ளைப் பூண்டு சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.

ஊரடங்கில் செயல்பட்ட பூண்டு மண்டிக்கு சீல் வைத்த அலுவலர்கள்

மேலும், வெள்ளைப் பூண்டு மண்டிகளிலும், சேமிப்பு கிடங்கிலும் எந்தப் பணிகளும் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வெள்ளைப் பூண்டு சேமிப்பு கிடங்கை திறந்து அதனை தரம் பிரிக்கும் வேலையிலும், லாரியில் வெள்ளைப் பூண்டு லோடு ஏற்றும் பணியினை இரண்டு கமிஷன் வியாபாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்ற வடுகப்பட்டி பேரூராட்சியினர், ஊரடங்கு உத்தரவு காலத்தில் திறந்து வைத்திருந்த இரண்டு வெள்ளை பூண்டு சேமிப்பு கிடங்குகளுக்கு சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: தடையை மீறி செயல்பட்ட வங்கி - அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

Last Updated : May 2, 2020, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details