தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்பாபு(52). இவர் கடந்த 12ஆம் தேதி சின்னமனூர்,வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள இவரது சித்தப்பா மகளன தமயந்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு தமயந்தின் கணவர் பெருமாள், சுரேஷ்பாபு இருவரும் அங்குள்ள தோட்டத்திற்கு சென்று தங்கியதாகவும் அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலி! - Former army soldier
தேனி: சின்னமனூர் அருகே போதையில் கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலையில் பெருமாள் எழுந்து பார்க்கும்போது சுரேஷ்பாபுவை காணவில்லை. தமக்கு முன்பாகவே எழுந்து சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என எண்ணி, வீடு திரும்பியுள்ளார். ஆனால் சுரேஷ்பாபு வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவர் எங்கே சென்றார் என அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
இதையடுத்து பெருமாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வெள்ளையம்மாள்புரம் பகுதியில் சுரேஷ்பாபுவை தேடி உள்ளனர். அப்போது, தோட்ட பகுதியில் உள்ள கிணற்றில் சுரேஷ்பாபு இறந்து பிணமாக மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு, தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுரேஷ்பாபுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகக்ப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷ்பாபு குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.