தேனி: கம்பத்தில் கடந்த 27ஆம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென உலா வந்த அரிக்கொம்பன் யானை அங்கிருந்த பொது மக்களை விரட்டி அச்சுறுத்தியது. இந்நிலையில் பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு காவல்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யானையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், பொதுமக்களால் யானைக்கு எந்தவித கோபத்தை ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு கம்பம் நகர்ப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தநாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார்க்குச் சொந்தமான வாழை தோப்பில் யானை தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.
இதனால் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல விவசாயிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். பின் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற யானை தொடர்ந்து இரண்டாவது நாளாக அந்தப் பகுதியிலே சுற்றி திரிந்து வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு கவலையே இல்லை... போதையில் கழிவுநீரில் படுத்து மதுப்பிரியர் அட்டகாசம்!