தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது

தேனி: வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கையில் நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவரை வனத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

மூவர் கைது

By

Published : Apr 20, 2019, 7:17 PM IST

தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சனூத்து தெற்கு பீட் பகுதியில், வனச்சரகர் இக்பால் தலைமையிலான வனத் துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் வனப்பகுதிக்குள் சுற்றித்திருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த திருப்பதி, தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பாண்டியராஜன், வருசநாட்டைச் சேர்ந்த சுரேஸ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் பயங்கர ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

பின்னர் வனத் துறை அலுவலர்கள், அவர்களிடமிருந்து எஸ்.பி.பி.எல். ரக நாட்டுத் துப்பாக்கி, பேரல் செட், கத்தி, அரிவாள், டார்ச்லைட்டுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டைக்காக பயன்படுத்தும் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மூவரும் இதற்கு முன் வனவிலங்குளை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து மூவர் மீதும் வனச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது...!

ABOUT THE AUTHOR

...view details