தேனி: தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏலத்தோட்டங்களில் கேரள மாநிலத்தவரும் தேனி மாவட்ட விவசாயிகளும் ஆண்டுதோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும் தட்டை அழுகல் நோய் அதிகரித்து வருகிறது. இதனால் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.