தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி. இவருக்கு அதே பகுதியில் இருக்கும் ஆறு ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கரும்புகள் வளர்ந்து அறுவடைக்கு கரும்புகள் தயாராக இருந்த நிலையில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.
'பற்றி எரிந்த கரும்புகளை போராடி அணைத்த தீயணைப்புதுறையினர்'
தேனி: ஆண்டிபட்டி அருகே கரும்புதோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புதுறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
கரும்புகள் எரிந்து நாசம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 6 ஏக்கர் பரப்பிளவில் பயிரிடப்பட்டிருந்த ரூ.6லட்சம் மதிப்பிலான கரும்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது. பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தோட்டத்திற்கு அருகில் இருந்த குப்பை மேட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீ பரவியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.