தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் உருவப்படம் எரிப்பு! - தேனியில் பரபரப்பு

தேனி: அன்னஞ்சி விலக்கு அருகே குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசிய திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, அச்சமுதாயத்தினர் அவரது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Portrait of film director Veluprabhakaran burns in Theni!
Portrait of film director Veluprabhakaran burns in Theni!

By

Published : Jul 28, 2020, 9:52 PM IST

திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் சமீபத்தில் இனையதள காணொலி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இது அந்தச் சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கு பகுதியில் அச்சமுதாய மக்கள் இன்று (ஜூலை28) வேலுபிரபாகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரனின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details