தேனி மாவட்டம் போடி ஜமீன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கும் கோடாங்கிபட்டி தென்றல் நகரைச் சேர்ந்த அழகுமணி என்பவருக்கும் ஏழாண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கபிலன் (4) என்ற மகனும், காவ்யா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. கணவன் பன்னீர்செல்வம் வேலைக்கு செல்லாமல் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சண்டை காரணமாக அழகுமணி கோடாங்கிபட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி வந்தார். பிற்பகல் மனைவியின் வீட்டிற்கு வந்த கணவர் பன்னீர்செல்வம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது 10 மாத பெண் குழந்தையை கொன்று விடுவேன் எனக் கூறி தூக்கிச் சென்றுள்ளார். பதற்றமடைந்த மனைவி அழகுமணி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கணவர் குழந்தையை கொலை செய்வதாக கூறி தூக்கிச் சென்றதாக புகாரளித்துள்ளார்.