தமிழ்நாடு

tamil nadu

மரம் விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு!

By

Published : Nov 4, 2020, 10:46 PM IST

தேனி : நாகலாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை, மகன் மீது மரம் விழுந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

மரம் விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு
மரம் விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பூமலைகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது, தந்தை பெருமாள் (வயது 65) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று (நவ.04) தேனியிலிருந்து தங்களது சொந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, நாகலாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்திலிருந்த காய்ந்த மரம் ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.

இதில், நடத்துநர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரது தந்தை பெருமாள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆறு பட்டாசு கடைகளில் வெடி விபத்து

ABOUT THE AUTHOR

...view details