தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவாக செயல்பட்ட வனத்துறை; தொலைந்த நகை மீட்பு - forestry

கும்பக்கரை அருவியில் குளித்தபோது தவறவிட்ட 2 பவுன் தங்க நகையை தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த வனத்துறையினர்

விரைவாக செயல்பட்ட வனத்துறை
விரைவாக செயல்பட்ட வனத்துறை

By

Published : May 16, 2022, 7:18 PM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நேற்று தேனியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கு கும்பக்கரை அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை எதிர்பாராதவிதமாக காணாமல் போனது.


இதனைத்தொடர்ந்து ராஜ்குமார் கும்பக்கரை அருவியில் இருந்த வனத்துறை ஊழியர்களிடம் தெரிவித்ததைத்தொடர்ந்து, தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் உத்தரவின்பேரில் நேற்று மாலை முதல் நீர்வீழ்ச்சி பகுதியில் தேடினர். இந்நிலையில் இரவு நேரமானதால் மீண்டும் இன்று காலையில் வனத்துறை ஊழியர்கள் மீண்டும் தேடியபோது நீர்வீழ்ச்சி பகுதியில் தவறவிட்ட இரண்டு சவரன் தங்க நகை கிடைத்தது.

இதனையடுத்து தேவதானப்பட்டி வனத்துறை அலுவலர் நகையைத் தொலைத்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவிக்கு தகவல் கூறினர். வனத்துறை அலுவலகத்தில் வைத்து அவர்களது 2 சவரன் தங்க நகையை வனத்துறை அலுவலர் ஒப்படைத்தார். மேலும் கடந்த வாரம் இதே போன்று திருச்சியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அருவியில் தொலைத்த 5 சவரன் தங்க நகையினை வனத்துறையினர் ஏற்கெனவே மீட்டு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெரியகுளம் - 61ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details