அழிந்து வரும் வெற்றிலை விவசாயம்: அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! தேனி: சின்னமனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வருடம் தோறும் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அப்போது சிறு குழந்தைகளுக்கு மருந்தாக பயன்படுவது முதல் அனைத்துவித இல்ல விழாக்களுக்கும் வெற்றிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இப்போது நாகரீக வளர்ச்சி ஏற்பட்டு வெற்றிலையை பயன்படுத்தும் ஆர்வம் பொதுமக்களிடம் குறைந்து வருவதால் மக்கள் வெற்றிலைகளை விலை கொடுத்து வாங்குவது குறைந்துவிட்டது.
பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன்களில் கூட வெற்றிலைக்கு போதிய விலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெற்றிலையை விளைவிக்க கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதால் கடன் வாங்கி வெற்றிலை விவசாயத்தை செய்து வரும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கடன் உதவி செய்தால் வரும் தலைமுறைகளும் வெற்றிலை விவசாயத்தை செய்வதற்கு உண்டுகோலாக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோல்டன் குளோப் விருதை வென்ற ‘Naatu Naatu’ பாடல்