தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் தரிசனம் - வாரிசு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் விஜயகாந்த் பட போஸ்டர் உடன் சாமி தரிசனம் செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் தரிசனம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் தரிசனம்

By

Published : Dec 2, 2022, 2:23 PM IST

தேனி: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர்களின் படங்கள் வெற்றி பெற வேண்டி அவர்கள் ரசிகர்கள் சபரிமலையில் பட போஸ்டருடன் வழிபாடு நடத்துவது வழக்கமாகி வருகிறது. நடிகர்கள் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு படங்கள் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் பட போஸ்டர் உடன் சபரிமலையில் பிரார்த்தனை செய்தனர்.

உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் வைத்து பிரார்த்தனை செய்தனர்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு தொல்லை செய்தவர் அடித்துக் கொலை : நாடகமாடிய மனைவி, மகன் கைது

ABOUT THE AUTHOR

...view details