தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி அதிலிருந்து, அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. ஆட்சியரின் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்து 83830 32114 என்ற எண்ணில் இருந்து அரசு அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியர் அவர்கள் நலம் விசாரிப்பது போல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
ஆட்சியர் பெயரில் போலியாக வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் இந்தக் குறுஞ்செய்தி தவறான செயல்களுக்கு வித்திடும் என்றும்; எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அறிவுறுத்தியுள்ளார்.