தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரையிலும் தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டவுள்ளது. இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸை கட்டுபடுத்த தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர் கூடலூர் ஆகிய நகராட்சி, பேரூராட்சியில் கடந்த சில நாள்களாக முழு கடையடைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது உத்தமபாளையம் பேரூராட்சியிலும் வணிகர்கள் தாமாக முனவந்து எட்டு நாள்களுக்கு கடைகள் அடைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.