தேனி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செவிலியப் பட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படித்த 36 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் அக்டோபர் மாத இறுதியில் பணியில் இருந்து விலக்கிக் கொள்வதாக சுகாதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி செவிலியர்கள் இன்று தேனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள், பெருந்தொற்றை கட்டுப்படுத்திய செவிலியராகளை போராடத் தூண்டாதே, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கிடு உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த தாங்கள், அரசுடன் இணைந்து செயல்பட்டு வந்தோம். எங்களில் பலர் பணி காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்ற பிறகும், தொடர்ந்து பணிபுரிந்து வந்தோம்.