தேனி அல்லிநகரம் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்வது மந்தையம்மன் கண்மாய். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பனசவாற்றிலிருந்து வரும் தண்ணீர் இந்தக் கண்மாயில் நிரப்பப்பட்டு, அப்பகுதியின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. காலப்போக்கில் குப்பைகள், இறைச்சிக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவற்றால் குளம் குறுகியது.
ஆகாயத் தாமரைகளை நவீன இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணி மேலும் ஆகாயத்தாமரை படிந்தும் மாசடைந்தும் காணப்பட்ட மந்தையம்மன் குளத்தை தனது சொந்த செலவில் தூய்மைப்படுத்தும் பணியினை கடந்த ஜனவரி 17ஆம் தேதி தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தொடங்கிவைத்தார்.
ஆகாயத்தாமரை அகற்றும் பணியைத் தொடங்கிவைத்த ஓபிஎஸ் இந்நிலையில், மந்தையம்மன் குளத்தில் படிந்திருக்கும் ஆகாயத்தாமரையை நவீன இயந்திரத்தின் மூலம் தூய்மைப்படுத்தும் பணியினை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (பிப். 18) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
'தாமரை'யை அகற்றும் பணியில் ஓபிஎஸ் சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நவீன இயந்திரத்தின் மூலம் ஆகாயத்தாமரை முழுவதுமாக அகற்றப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க பூஜை வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.
நெருங்கும் தேர்தல் - தேனியில் ஓபிஎஸ் இந்நிகழ்வில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பொதுப்பணித் துறை, நகராட்சி அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.