தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து எல்லைப் பகுதியான தேனியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி போடி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை, தம்மிநாயக்கன்பட்டி, வெம்பகோட்டை, முத்தையன் செட்டிபட்டி, தேவாரம், கோம்பை, பாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அதனால் அப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பல ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை உள்ளிட்டவை சேதமடைந்தன. மின் விநியோகமும் தடைபட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஆகஸ்ட் 7) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு அப்போது, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகள், கால்நடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை முதலமைச்சர் ஆறுதல் கூறினார். அதையடுத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அவருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அதிமுக சார்பில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!