தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (டிச.30) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அரசு விழாவில் தூங்கி வழிந்த எம்எல்ஏ விழாவின் தொடக்கத்தில் பேசி முடித்து விட்டு அமர்ந்த கம்பம் எம்எம்ஏ ஜக்கையன், மாவட்ட ஆட்சியர், தேனி எம்.பி., துணை முதலமைச்சர் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில், மேடையிலேயே தூங்கி வழிந்தார். அண்ணா தொழிற்சங்க கன்வீனர் பதவி இவருக்கு தற்போதுதான் அதிமுக அமைப்பு செயலாளராக பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அதிமுக அரசு செயல்படுகிறது’ - அமைச்சர் சி.வி. சண்முகம்