தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை ஏறக்குறைய 3,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி முதல் பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 105 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த முகாமில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகக் கூறி சிகிச்சையில் இருந்த அனைவரும் திடீரென தங்களது அறையை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.