தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கரோனா உயிரிழப்பு 15ஆக உயர்வு - corona death increase to 15

தேனி: மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. ‌

corona
corona

By

Published : Jul 9, 2020, 1:41 PM IST

தேனியில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை 1,297 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பும் இருந்து வந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மாவட்டத்தில் போடி, ஓடைப்பட்டி, கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 நபர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details