மதங்கள் கடந்து நல்லிணக்கத்தோடு வாழவே பண்டிகைகள் கொண்டாப்படுகின்றன. ஆனால் இந்த பண்டிகை காலங்களில் சந்தர்ப்பவாதிகள் சிலர் மதக்கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். நாடு முழுவதும் வரும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.
அதில், "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்துக்கள் அனைவரும் இந்த தீபாவளி பண்டிகை முதல் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம், நலிவடைந்து வரும் இந்து வியாபாரிகளை ஊக்குவிப்போம். அந்நிய பொருட்களை தவிர்ப்போம்" என்று அச்சிடப்பட்டிருந்தது.
போலீசரால் கிழித்து எறியப்பட்ட போஸ்டர் இதே போல் சுமார் 100 போஸ்டர்கள் உத்தமபாளையம் வடக்குத் தெரு, தேரடி, மெயின் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் இரவோடு இரவாக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக உத்தமபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம் செல்வா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வா இதனிடையே இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாஜகவின் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வாவிடம் கேட்டபோது, "இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காகவே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் அகற்றியதால் அடுத்ததாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தயங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் இந்த அச்சடிக்கும் இயந்திரத்தை கண்டறிந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் குட்டன்பெர்க் என்பவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர். இது தெரியாமல் தன்னுடைய மதப்பற்றை தீவிரவாத மனப்பான்மையாடு பரப்புகிறார்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இவ்வாறு செயல்படுவோருக்கு காவல் துறையினர் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக இருக்கிறது.
இதையும் படிங்க:
அதிகார அத்துமீறல்: லாக்கப் டார்ச்சரால் வாழ்க்கையை இழந்து நீதிக்காக காத்திருக்கும் யேசுதாஸ்