தேனி மாவட்டத்தில் பெரியகுளம்,தேனி, சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர் உள்ளிட்ட இடங்களில் அடித்த பேய் காற்றுக்கு வாழை, தென்னை மரங்கள் அடியோடு ஒடிந்து விழுந்து நாசமாகின.
இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூவன், பச்சை, செவ்வாழை மரங்கள் சேதமாகின. மேலும் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் நேற்று அடித்த காற்று தாக்குப்பிடிக்க முடியாமல் வேறோடு, வேறாக சாய்ந்துள்ளன.