தேனி: வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான ’மாமனிதன் வைகோ’ தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கில் திரையிட்டப்பட்டுவருகிறது. இதனா பல்வேறு திரையரங்குகளில் திரையிடும் முயற்சியில் மதிமுகவினர் முயற்சித்துவருகின்றனர். அந்த வகையில் தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் மாமனிதன் ஆவணபடத்தை வெளியிடப்பட்டது. மதிமுக சார்பில் திரையிடுவதற்காக ஏற்பாடுகளை தேனி மாவட்ட மதிமுகவினர் செய்து இருந்தனர். இதில் வைகோவின் மகனும், மதிமுகவின் தலைமை கழக செயலாளருமான துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஆவண படத்தை பார்ப்பதற்காக மதிமுக சார்பில் வழங்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளையும் தேனி மாவட்ட மதிமுகபொறுப்பாளர் கே. ராமகிருஷ்னன் பெற்று அதனை மதிமுகவினருக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் துரை வைகோவின் தொண்டர்களும் டிக்கெட்டை பெற்றுக்கொண்டிருந்தனர்.