பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி. இவர் கருவுற்று ஆறுமாதமான நிலையில், பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் (ஜூலை 3) திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாத்திமா மேரிக்கு, நேற்று காலை (ஜூலை 4) பெண் குழந்தை பிறந்தது.
உடலில் திடீரென அசைவு
பிறந்து நீண்ட நேரமாகியும் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால், மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட இருந்த குழந்தையின் உடலில் திடீரென அசைவுகள் தென்பட்டது.