தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது! - தேனியில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது

தேனி: குளியலறையில் செல்ஃபோனை மறைத்து வைத்து, பெண் குளிப்பதை படம் பிடித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த நபர்
பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த நபர்

By

Published : Dec 2, 2019, 4:57 PM IST

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ்(36). இவர் அதே பகுதியில் வசித்து வரும் பெண்ணின் வீட்டிலுள்ள குளியலறையில் தனது செல்ஃபோனை படம்பிடிக்கும் வகையில் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது செல்ஃபோன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த செல்ஃபோனை ஆய்வு செய்ததில் அது சுரேஷுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் ஆபாசமாக திட்டியும் சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்த நபரை கைது செய்த காவல் துரையினர்

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அல்லிநகரம் காவல் துறையினர் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருடைய செல்ஃபோனை ஆய்வு செய்த காவல் துறையினர் அதில் பல ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.

இது தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட சுரேஷ், இதுபோன்று பல வீடுகளுக்குச் சென்று குளியலறைக்குள் செல்ஃபோனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். அவ்வாறு பதிவு செய்த வீடியோக்களை யாருக்கும் பகிரவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடைய செல்ஃபோனை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முழுத்தகவல் தெரியவரும் என்றனர்.

இதையும் படிங்க: பேருந்தில் இளைஞர் பெண்ணிடம் அத்துமீறிய காணொலி வைரல்.!

ABOUT THE AUTHOR

...view details