தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டியுடன் கொஞ்சி மகிழ்ந்த தாய் புலி...சிசிடிவி காட்சி - Enjoying cuddling with cub

தேனி அருகே வனப்பகுதியில் குட்டியுடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடிய தாய் புலியின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 22, 2022, 11:23 AM IST

தேனி:மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வெள்ளி மலைப் வழியாக சென்ற பொதுமக்கள் அங்கே உள்ள மலைப்பகுதியில் புலி அதன் இரண்டு குட்டியோடு கொஞ்சி மகிழுந்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு அதனை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.

அதில் புலி தன் தாய் பாசத்தை உணர்த்தும் விதமும், குட்டிகளோடு விளையாடுவதும் அதனைத் தொடர்ந்து குட்டிகள் அங்கு உள்ள நீரோடையில் நீர் அருந்துவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேகமலை புலிகள் சரணாலயத்தில்குட்டியுடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடிய தாய் புலி

இறுதிக் காட்சிகளில் தாய் புலி தன் குட்டிகளை விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதும், தண்ணீரை அருந்திவிட்டு குட்டிகள் அதனை பின் தொடர்வதும் காண்போரை கவர்ந்தன.

இதையும் படிங்க:54 கிலோ கஞ்சா கடத்தல்... இளைஞர்கள் நான்கு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details