தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மர்ம பூஜை! 6 பேர் மீது வழக்கு..மகரஜோதி வரும் இடத்தில் வினோத பூஜையா - at Sabarimala Ponnambalamedu

கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம் பொன்னம்பலமேட்டில் சட்டவிரோதமாக பூஜை செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 16, 2023, 7:27 PM IST

Updated : May 16, 2023, 10:03 PM IST

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மர்ம பூஜை செய்த 6 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு

பத்தினம்திட்டா(கேரளா): புனித தலமாக திகழும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சபரிமலை ஐயப்பனை காண ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி 48 நாட்கள் மண்டல விரதம் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 'மகரஜோதி' அன்று பக்தர்களுக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவமாக காட்சியளிப்பார்.

சபரிமலையின் ஒரு பகுதியான பொன்னம்பலமேட்டில் சட்ட விரோதமாக நுழைந்து பூஜை செய்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 'நாராயணசாமி' என்பவரது தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது தெரியவந்துள்ளது. உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து சட்ட விரோதாமாக பொன்னம்பலமேட்டில் பூஜைகள் செய்தவர்கள் மீது பச்சகானம் வனத்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து சட்ட விரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்ததாக 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட விரோத பூஜையை செய்த நாராயணசாமி, ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னம்பலமேட்டிற்கு வந்து பூஜை செய்தாகவும், இவர் இதற்கு முன்பு சபரிமலையில் மேல்சாந்தியாக இருந்து பின்னர், கீழ் சாந்தியின் உதவியாளராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை, விரிவான விசாரணை மேற்கொண்டு அவசர அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த வீடியோவில் நாராயணசாமி தலைமையில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். "சுவாமி இப்போ பொன்னம்பலமேட்டில் பூஜை செய்கிறார், நாராயணசாமி. ஐயப்பனுக்கு இங்கே இருந்துதான் மகரஜோதி தெரிகிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த இடத்தை எட்டமுடியுமா? என கனவாக இருந்தது; அது இன்று நாராயணசாமி மூலம் நனவாகியது. சந்திரன், கருணா, சரவணா ஆகிய சாமிகள் இங்கே வந்துள்ளோம்" என்றவாறு இந்த வீடியோவை எடுத்தபடியே ஒரு நபர் பேசியுள்ளார்.

மேலும், நடந்த இந்த சட்ட விரோத பூஜை குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வனத்துறை தலைவர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளதாக தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சபரிமலையின் ஐதீகம் கெட்டுவிட்டதாகவும், இதற்கு தேவப்பிரசன்னம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உயர்பாதுகாப்பு வளையம் கொண்ட வனப்பகுதியாக திகழும் பொன்னம்பலமேட்டில் பூஜை நடத்தும் அளவிற்கு அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணன் மீது முன்னதாகவே, தந்திரி எனக் கூறிக் கொண்டு காரில் சென்றதற்காக கைதானது; கீழ் சாந்தி உதவியாளராக இருந்துகொண்டு பூஜைக்கு வரும் பக்தர்களிடம் போலியான ரசீதுகள் மூலம் ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆட்சியே அமைக்கல அதுக்குள்ள கரண்ட் பில் பிரச்னை! - கர்நாடகாவில் நிலவும் அக்கப்போர்!

Last Updated : May 16, 2023, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details