தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் விபரங்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூர் காவல் துறையினர் ரோந்து சென்றபோது செல்வபுரம் விலக்கில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10.5 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.