தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை பிரதமராகும் கனவில் முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிடம் அடகு வைத்துள்ளார் ஸ்டாலின் - அண்ணாமலை - துணை பிரதமர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை கேரளாவிடம் அடகு வைத்துள்ளார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக கனவு
மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக கனவு

By

Published : Nov 8, 2021, 7:36 PM IST

தேனி மாவட்டம்: தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தாமல் கேரளப் பகுதிக்கு நீர் திறந்துவிட்டதைக் கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்களின் நலனுக்காக ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கால் கட்டப்பட்டது, முல்லைப் பெரியாறு அணை.

அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தபோது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 2,41,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்தன. ஆனால், கேரள அரசினால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக 136 அடியாக குறைக்கப்பட்டதால், தற்போது 71,000 ஏக்கராக பாசன நிலங்கள் குறைந்துள்ளன.

மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக கனவு

துணை பிரதமராகும் கனவில் மு.க.ஸ்டாலின்

இதன் உச்சகட்ட அலங்கோலமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் அரசு எந்தவித அறிவிப்பும் இன்றி, தேனி மாவட்ட ஆட்சியர் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு நீரை திறந்து விட்டுள்ளது.

இதனால் தேனி உள்பட தென் மாவட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு அணையின் உரிமையை தமிழ்நாடு இழந்திருக்கிறது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்தோடு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் பாஜகவின் போராட்டம் தொடரும்.

2024இல் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் துணை பிரதமராகவும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகவும் வர வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவிற்காக முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை கேரளாவிடம் அடகு வைத்துள்ளனர்.

தினசரி அறிக்கை வெளியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்‌‌ சுப.வெங்கடேசன் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க:பெரம்பூரில் முதலமைச்சர் ஆய்வு; காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமணத் தம்பதி

ABOUT THE AUTHOR

...view details