தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீட்ரூட் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி: பீட்ரூட் விளைச்சல் அமோகமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பீட்ரூட்

By

Published : Aug 7, 2019, 6:51 PM IST

பீட்ரூட் 60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் குறுகிய காலப் பயிராகும். இதனால், தேனி மாவட்டத்திலுள்ள பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, வலையபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, ஆதிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பீட்ரூட் சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றுவருகின்றது.

இறவைப் பாசனம் மூலம் நடைபெறுகின்ற பீட்ரூட் சாகுபடிக்கு சந்தையில் தற்போது நல்ல கிராக்கியும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பீட்ரூட் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

இது குறித்து வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் கூறும்போது, ‘விதையாக வாங்கி நடவு செய்து முறையாக பராமரிப்பதன் மூலம் 60 நாட்களில் பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகின்றது. விதை, உரம், மருந்தடித்தல், களையெடுத்தல், ஆட்கள் கூலி என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகின்றது.

2018ஆம் ஆண்டை விட இந்தாண்டு பீட்ரூட்டிற்கு தற்போது சந்தையில் விலையும் கணிசமாக கிடைக்கின்றது. கிலோ ஒன்றுக்கு ரூபாய் 15 முதல் 20 வரை கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை’ என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

வாழையாத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி ரங்கராஜ்

ABOUT THE AUTHOR

...view details