தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அடுத்த சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கணேசன் (60). விவசாயியான இவர் இன்று காலைவழக்கம் போல் தோட்டத்தில் கால்நடைகளுக்கு புல் அறுக்கப் போன போது, தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி திடீரென பாய்ந்து தாக்கியது.
தேனி மாவட்டத்தில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்
தேனி: கடமலைக்குண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார்.
கரடி தாக்கி விவசாயி படுகாயம்
இதில் படுகாயமடைந்தவர் வலி தாங்கமுடியாமல் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடி வந்து கணேசனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த கண்டமனூர் வனத்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விவசாயியை கரடி தாக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.