தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு சற்று நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து நேற்று(ஜூலை 27) பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.