பசும்பொன் முத்துராமலிங்கத்தின் 113ஆவது பிறந்த நாள் மற்றும் 58ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடம், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், ஆண்டிபட்டியை அடுத்த கானா விலக்கு பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்க ஆட்டோவில் வந்த நபர்கள் விபரீதமாக வீலிங் செய்துள்ளனர். ஆட்டோவின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதி என சுமார் 10 பேர் வரை நின்று கொண்டு, ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தை தூக்கியவாறு வாகனத்தில் சென்றுள்ளனர்.